Tamilசெய்திகள்

திருவள்ளூவருக்கு மீண்டும் காவி வண்ணம்! – முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மீண்டும் காவி வண்ணம் பூசப்பட்ட விவகாரத்தைக் கையில் எடுத்து, தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து தன் வலைத்தளப் பக்கத்தில் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க.

தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது. ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?

தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம். இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க.

வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் – அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது.

சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்?

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.