ஒரே படத்தில் 8 இசையமைப்பாளர்கள்!
8 வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம், விக்கி டோனர். செயற்கை கருத்தரிப்புக்கு விந்து தானம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடிகளை காமெடியாக சொல்லியிருந்த இப்படம், தாராள பிரபு என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. ஹரீஷ் கல்யாண், தான்யா ஹோப், விவேக் நடிக்கின்றனர். இயக்குனர் ஏ.எல்.விஜய் உதவியாளர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். இவர் ஏற்கனவே தெலுங்கில் நாகசைதன்யா நடித்த யுத்தம் சரணம் படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் எட்டு இசையமைப்பாளர்கள் பணியாற்ற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அனிருத், விவேக்-மெர்வின், கபீர் பாஸ்கர், இன்னோ கங்கா, ஷான் ரோல்டன், மேட்லி புளூஸ், பரத் ஷங்கர், ஊர்க்கா ஆகிய 8 இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளனர்.