சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி வருகிற 5-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் மேற்கண்ட நாட்களில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு வர வேண்டாம் எனவும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது.