சாதனையை தவறவிட்ட ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்!
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி இரண்டு இன்னிங்சில் மட்டுமே வெற்றி பெற்றது. இரண்டிலும் ஸ்மித் 4 மற்றும் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் அரிய வகை சாதனையை கோட்டைவிட்டார். ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனதில் இருந்து தொடர்ச்சியாக 21 தொடர்களில் குறைந்தது ஒரு அரை சதமாவது அடித்து விடுவார். தற்போது அவரால் அரைசதம் கடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இங்கிலாந்து அணியின் மார்கஸ் டிரெஸ்கோதிக் 23 தொடர்களில் குறைந்தது ஒரு அரைசதமாவது அடித்துள்ளார். தற்போது அந்த சாதனையை ஸ்மித்தால் முறியடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த தொடரின்போது அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.