Tamilவிளையாட்டு

நியூசிலாந்து – இந்தியா இடையிலான தொடர் அட்டவணை வெளியீடு!

நியூசிலாந்து – இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தியாவில் உள்ள ரசிகர்கள் போட்டியை கண்டுகளிப்பதற்கு வசதியாக அனைத்து ஒருநாள் போட்டிகளும் பகல்-இரவு ஆட்டமாக நடத்தப்படுகிறது.

முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் நாளைமறுதினம் (23-ந்தேதி) நடக்கிறது. 2-வது மற்றும் 3-வது போட்டி மவுண்ட் மவுங்கானுயில் முறையே 26-ந்தேதியும், 28-ந்தேதியும் நடக்கிறது. 4-வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் ஜனவரி 31-ந்தேதி நடக்கிறது. 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெலிங்டனில் பிப்ரவரி 3-ந்தேதி நடக்கிறது. அனைத்து போட்டிகளிலும் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

அதன்பின் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வெலிங்டனில் நடக்கிறது. இந்த ஆட்டம் மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. 2-வது போட்டி ஆக்லாந்தில் பிப்ரவரி 8-ந்தேதி நடக்கிறது. இந்த போட்டி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் பிப்ரவரி 10-ந்தேதி நடக்கிறது. இந்த போட்டி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது.

அனைத்துப் போட்டிகளிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *