Tamilசெய்திகள்

கேரள முதல்வராகும் வி.டி.சதீஷன்!

கேரளாவில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 102 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த முதலமைச்சராக வி.டி. சதீசன் தேர்வாகி உள்ளார்.

பரவூர் தொகுதியில் தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெற்றுள்ள அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவராகச் சிறப்பாகச் செயல்பட்டதுடன், இந்தத் தேர்தல் வெற்றியில் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் கே.சி. வேணுகோபால் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோரின் பெயர்களும் அடிபட்ட நிலையில், கட்சியின் மேலிடம் இன்று (மே 14) வி.டி. சதீசனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட இழுபறிக்குப் பிறகு கேரளாவின் புதிய முதல்வராக அவர் பொறுப்பேற்பது உறுதியாகியுள்ளதால், காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.