நீட் ஒழிப்பிற்காக பெறப்படும் ஒவ்வொரு கையெழுத்தும், நம் கல்வி உரிமை காப்பதற்கான உயிரெழுத்து – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நீட் ஒழிப்பதற்காக திமுக சார்பில் பெறும் ஒவ்வொரு கையெழுத்தும், நம் கல்வி உரிமை காப்பதற்கான உயிரெழுத்து என்பதை உணர்ந்து செயல்படுவோம் எனது தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நீட் தேர்வை ரத்து செய்வதற்காக திமுக இளைஞரணி, திமுக மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தொடங்கப்படவுள்ள மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடர்பாக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி, மாவட்ட- மாநகர அமைப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக இன்று பங்கேற்றோம்.
அணிகளின் தலைவர்கள் இணை – துணை செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் கல்வி உரிமையை பாதுகாத்திடவும், நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்கவும், இந்த கையெழுத்து இயக்கத்தை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்துச் செல்வதற்கான பணிகள் குறித்து அறிவுறுத்தினோம்.
நீட் ஒழிப்பிற்காக பெறப்படும் ஒவ்வொரு கையெழுத்தும், நம் கல்வி உரிமை காப்பதற்கான உயிரெழுத்து என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.