Tamilசெய்திகள்

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் கோவை, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு சில இடங்களில கனமழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. நேற்று நீலகிரி, ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.