பட்டாசு ஏற்றி சென்ற வேன் வெடித்து சிதறியது! – விழுப்புரத்தில் பரபரப்பு
அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர இருப்பதால், பட்டாசு விற்பனை தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பட்டாசு கடை அமைப்பதற்கு அரசு விதிக்கப்பட்ட சில கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால் ஏராளமானோர் பட்டாசு கடை போடுவதற்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், விழுப்புரம் அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற மினிவேன் ஒன்று தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்ததோடு, 10 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.