பார்த்திபனால் திரிஷாவை கட்டி அணைத்துக் கொண்ட விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் ‘96’. இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. விழாவில் விஜய் சேதுபதி, திரிஷா, பிரேம் குமார் உட்பட `96’ படத்தின் பிரபலங்கள் பங்கு பெற்றனர். அவர்களுடன் திருமுருகன் காந்தி, சமுத்திரக்கனி, சேரன், பார்த்திபன், லெனின் பாரதி, பி.எஸ்.மித்ரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய பார்த்திபன்,
‘காதலிக்கிறதுக்கு காதலியோ, காதலனோ தேவையில்லை. காதல் மட்டுமே போதும். ‘யமுனை ஆற்றிலே’ பாடலோட ஒரிஜினல் பதிப்பைவிட இந்த படத்துல அந்த பாட்டு எப்போ வரும் என்றுதான் காத்துக் கொண்டு இருந்தேன். அந்த காட்சியை பார்த்த பிறகு இயக்குனருடைய காலை தொட்டு கும்பிடணும் என்று நினைத்தேன். படம் முழுக்க நம்மளை ஏமாத்தி காக்க வெச்சு கடைசி வரைக்கும் ஒரு முறையாவது கட்டி பிடிக்கமாட்டாங்களானு ஆர்வமா இருந்தோம். அது இங்கே நடக்க இருக்கு” என்று விஜய் சேதுபதியையும் திரிஷாவையும் மேடைக்கு அழைத்து கட்டிப்பிடிக்கச் சொன்னார்.
`காதலே காதலே’ பாடலின் பின்னணி இசையாக வர இருவரும் கட்டிப் பிடித்துக்கொண்டனர். “இதுதான் படத்துடைய கிளைமாக்ஸ்” என்றார் விஜய் சேதுபதி.