Tamilசெய்திகள்

கன்னடருக்கு தமிழக அரசு பதவி – முதல்வர் ஜோசப் விஜயின் அதிரடி நடவடிக்கை

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும் தொழிலதிபருமான கே. வெங்கட நாராயணா தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாகக் கூட்டணியில் இணையும் வைகோவுக்குத்தான் இந்தப் பதவி வழங்கப்படும் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட சூழலில், யாரும் எதிர்பாராத விதமாகப் பெங்களூரைச் சேர்ந்த கன்னடரான வெங்கட நாராயணாவுக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாநில அமைச்சருக்கு (Minister of State) இணையான நெறிமுறை அந்தஸ்தும் சலுகைகளும் வழங்கப்படும் இந்தப் பதவியை ஏற்பவர், அமைச்சரவையின் உறுப்பினராக இருக்க மாட்டார் என்றபோதிலும், மத்திய அரசுடனான தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு, மாநிலத்தின் முக்கியக் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை டெல்லியில் முன்னெடுத்துச் செல்வது, முதலமைச்சரின் டெல்லி பயணங்களை முறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகப் பணிகளை மேற்கொள்வார்.