பியூஸ் சாவ்லாவை ரூ.6.75 கோடிக்கு ஏலம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 13-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நேற்றுநடைபெற்றுவருகிறது.
ஏலம் தொடங்கியது முதலே பல்வேறு அணி உரிமையாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு வீரர்களை தங்கள் வசப்படுத்த முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
மற்ற அணிகள் வீரர்களை ஏலம் எடுக்க போட்டி போட்டுக்கொண்டிருந்தபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதானமாக செயல்பட்டுவந்தது.
பின்னர் 1 கோடி ரூபாய் துவக்க விலையாக நிர்ணயிக்கப்பட்ட இங்கிலாந்து அணியியை சேர்ந்த ஆல்-ரவுண்டரான சாம் கரனை சென்னை அணி 5.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நெய்தன் குர்டர் நைலை ஏலம் எடுக்க சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால், இறுதியில் குர்டர் நைலை 8 கோடி ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியது.
இதையடுத்து, 1 கோடி ரூபாய் துவக்க விலையாக நிர்ணயிக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளரான பியூஸ் சாவ்லாவை ஏலம் எடுக்க பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.
இறுதியில், சென்னை அணி பியூஸ் சாவ்லாவை 6.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இந்த இரு வீரர்களை ஏலம் எடுத்ததன் மூலம் சென்னை அணியின் ஏலம் எடுத்ததன் மூலம் 2.35 கோடி ரூபாய் மட்டுமே எஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.