Tamilவிளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – முதல் சுற்றில் நடால் வெற்றி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

இதில், 11 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ஜெர்மனியின் தகுதி சுற்று வீரர் யான்னிக் ஹன்ப்மனை எதிர்கொண்டார். இதில் 6-2, 6-1, 6-3 என்ற நேர்செட்டில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில், நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் போலந்து வீரர் ஹூபெர்ட் ஹூர்காச்சை எதிர்கொண்டார். இதில், 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஹூர்காச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *