பி.எச்.பாண்டியனின் மறைவு அதிமுகவுக்கு பேரழிப்பு – அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல்
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் பிறந்தவர் பி.எச்.பாண்டியன் (வயது 74). அதிமுகவைச் சேர்ந்த இவர் 1985 முதல் 1989 வரை தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகராக இருந்தார். மூன்றுமுறை சேரன்மகாதேவி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நெல்லை மக்களவை தொகுதி எம்.பி.யாகவும் (1999), அதிமுக அமைப்பு செயலாளராகவும் பணியாற்றியவர்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பி.எச்.பாண்டியன் சென்னையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பி.எச்.பாண்டியன் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அவரது மறைவு தென் மாவட்டங்களுக்கு பேரிழப்பு என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு பக்கபலமாக இருந்தவர் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம் சூட்டினார்.