மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர்!
போர்ச்சுக்கலை சேர்ந்த ஜோஸ் மவுரினோ கடந்த 2016-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கடந்த சில மாதங்களாக இவருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னணி வீரருமான பால் போக்பா ஆகியோருக்கும் இடையில் பனிப்போர் நிலவி வந்தது.
இதற்கிடையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அணிகளின் புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில் ஜோஸ் மவுரினோ அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஒலே கன்னர் சோல்ஸ்க்ஜயரை தற்காலிக பயிற்சியாளராக நியமித்துள்ளது.
ஜோஸ் மவுரினோ 2004 முதல் 2007 வரை செல்சி அணியிலும், 2008 முதல் 2010 வரை இன்டர் மிலன் அணியிலும் 2010 முதல் 2013 வரை ரியல் மாட்ரிட் அணியிலும், 2013 முதல் 2015 வரை செல்சி அணியிலும் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார்.