மும்பை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த சச்சினின் மகன் அர்ஜுன்
ஆந்திர மாநிலத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்கும் விஸ்ஸி டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியில் சச்சின் மகன் அர்ஜூன் இடம் பிடித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் வருகிற 22-ந்தேதி விஸ்ஸி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்தத் தொடரில் மும்பை அணி இடம் பெறுகிறது. இதற்கான மும்பை அணியில் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூனுக்கு இடம் கிடைத்துள்ளது.
ஏற்கனவே அர்ஜூன் தெண்டுல்கர் டி20 மும்பை லீக் தொடரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.