மோசடி வழக்கு – செந்தில் பாலாஜிக்கு சம்மன்
அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட மோசடி வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டை சீல் வைத்த போலீசார் பின்னர் அதனை அகற்றியும் சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக சம்மன் அனுப்பி நேரில் அழைத்தும் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. அதில் மார்ச் 3-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.