மோடியை கன்னத்தில் அறைவேன் என்று சொல்லவில்லை – மம்தா பானர்ஜி
“மோடியை கன்னத்தில் அறைவேன்” என்று மம்தா பானர்ஜி சொன்னதாக பிரதமர் மோடி கூறியதை மம்தா பானர்ஜி மறுத்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் புருலியா மாவட்டம் சிமுலியாவில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-
மோடியை கன்னத்தில் அறைவேன் என்று நான் பேசியதாக மோடி கூறியுள்ளார். அது, ஜனநாயக அறை. மொழியை புரிந்து கொள்ளுங்கள். நான் ஏன் உங்களை அறையப்போகிறேன். நான் அப்படிப்பட்ட ஆள் அல்ல.
ஜனநாயக அறை என்றால், மக்கள் தங்கள் ஓட்டு மூலமாக தீர்ப்பு அளிப்பார்கள் என்று அர்த்தம்.
இவ்வாறு அவர் பேசினார்.