ரூ.2 லட்சம் மதிப்புள்ள சிசிடிவி கேமராக்களை காவல் துறைக்கு வழங்கிய நடிகர் சூர்யா!
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப் போற்று திரைப்படம் உருவாகியுள்ளது. இதையடுத்து தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். நடிப்பதையும் தாண்டி சூர்யா தனது அகரம் பவுண்டேசன் மூலம் கல்வி உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், தமிழக காவல் துறைக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள 50 சிசிடிவி கேமராக்களை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் அந்நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜ்சேகர் பாண்டியன் வழங்கியுள்ளார். இந்த கேமராக்கள் தமிழகத்தின் 3 முக்கிய பகுதிகளை கண்காணிக்க பொருத்தப்பட உள்ளது.