‘வர்மா’ படப்பிடிப்பு முடிந்தது
தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் நாயனாக அறிமுகமாகிறார்.
பாலா இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் தொடங்கியது. பின்னர் பல இடங்களில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட இருக்கின்றனர்.
இப்படத்தில் துருவ் ஜோடியாக வங்காளத்தை சேர்ந்த நடிகை மேகா சவுத்ரி நடித்துள்ளார். ஒரு பாடலுக்கு பிக்பாஸ் புகழ் ரைசா நடனம் ஆடி இருக்கிறார். ரதன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். `குக்கு’, `ஜோக்கர்’ பட இயக்குநர் ராஜு முருகன் வசனங்களை எழுதியுள்ளார். இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.