Tamilசெய்திகள்

விஜய் கல்வி விருது வழங்கும் விழா குறித்த புதிய தகவல்!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் “விஜய் கல்வி விருது வழங்கும் விழா” குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடப்பு 2026-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், இந்த ஆண்டுக்கான பாராட்டு விழா ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.

கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல், இந்த முறை தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மாணவர்களைச் சந்திக்கவிருப்பதால், விழா மேடையில் பல்வேறு பிரம்மாண்ட மற்றும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யத் திட்டமிடப்பட்டு வருகின்றன.

இதற்காக, மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் முழுமையான தரவுகளைச் சேகரிக்கும் பணிகளில் தவெக மாவட்ட நிர்வாகிகள் தற்போது மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.