ஸ்பெயின் பார்சிலோனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – சாய்னா நோவல் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றில் ஜெர்மனைச் சேர்ந்த யோன்னே லீயை எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால் 21-16, 21-14 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் எச்.எஸ். பிரனோய் 18-21, 15-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.