Tamilசெய்திகள்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஹேமந்த் சோரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடைபெற்றது. அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கலாமே? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்கு ஹேமந்த் சோரன் சார்பில் ஆஜரான கபில் சிபல், முதல்வர் தொடர்பான பிரச்சினை என்பதால் நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகினோம் என்றார். அதற்கு நீதிமன்றங்கள் அனைவருக்கு திறந்திருக்கும். உயர்நீதிமன்றம் அரசியலமைப்பு நீதிமன்றம். ஹேமந்த் சோரன் தொடர்பான மனுவை விசாரிக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. அவர் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதற்கிடையே ஜார்கண்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹேமந்த் சோரன் ஒரு நாள் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.