Tamilவிளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – கார்சியா, ஜபேர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் 12-ம் நிலை வீராங்கனையான கோகோ கவூப் (அமெரிக்கா)-கரோலின் கார்சியா ( பிரான்ஸ் ) மோதினார்கள்.

இதில் 17-வது வரிசையில் உள்ள கார்சியா 6-3 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார். 28 வயதான அவர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளார். கார்சியா அரையிறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபேரை (துனிசியா) சந்திக்கிறார்.

ஜபேர் காலிறுதி ஆட்டத்தில் 6-4 , 7-6 ( 7-4 ) என்ற நேர் செட் கணக்கில் அஜ்லா டாம்லிஜோனோ விச்சை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார். 28 வயதான அவர் அமெரிக்க ஓபன் போட்டியில் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் 5-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே)-மேட்டோ பெரிடினி (இத்தாலி) மோதினார்கள். இதில் ரூட் 6-1, 6-4, 7-6(7-4) என்ற நேர் செட் கணக்கில் 13-வது வரிசையில் உள்ள பெரிடினியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 23 வயதான கேஸ்பர்ரூட் முதல் முறையாக அமெரிக்க ஓபனில் அரையறுதிக்கு நுழைந்துள்ளார்.