Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – அரையிறுதிக்கு முன்னேறினார் ரஷியாவின் மெத்வதேவ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் காலிறுதிச் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், போலந்து வீரர் ஹுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார்.

இதில் இருவரும் தலா 2 செட்களை போராடி வென்றனர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை மெத்வதேவ் கைப்பற்றினார்.

இறுதியில், மெத்வதேவ் 7-6 (7-4), 2-6, 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.