Tamilவிளையாட்டு

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் – பெடரரை வீழ்த்தி டொமினிக் சாம்பியன் பட்டம் வென்றார்

இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் நடைபெற்றது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் – ஆஸ்திரியாவின் டொமினிக் தியெம் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

முதல் செட்டை 6-3 என ரோஜர் பெடரர் எளிதில் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-வது செட்டை டொமினிக் தியெம் கைப்பற்றி அசத்தினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டியில் இருவரும் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். இறுதியில் 7-5 என தியெம் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 8-ம் நிலை வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் தரம்நிலை பெறாத அண்ட்ரீஸ்குவை எதிர்கொண்டார். இதில் அண்ட்ரீஸ்கு 6-4, 3-6, 6-4 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *