Tamilவிளையாட்டு

இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்

ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி – ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னெற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. 2-வது காலிறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

முதல் கால் பகுதி (15 நிமிடம்) ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அபாரமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி குர்ஜித் கவுர் கோல் அடித்தார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது.

3-வது மற்றும் 4-வது கால் பகுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். பல வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைத்தன. ஆனால் ஆஸ்திரேலிய வீராங்கனைகளால் அதை கோலாக மாற்ற முடியவில்லை.

இதனால் கடைசி இரண்டு கால் பகுதி ஆட்டங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆகவே இந்தியா 1-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
—————-
ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆக்கி அணிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

பி.வி.சிந்து தகுதியான பதக்கத்தை வென்றுள்ளது மட்டுமல்லாமல் ஒலிம்பிக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணிகளின் வரலாற்று முயற்சிகளையும் பார்த்தோம். இது பாராட்டத்தக்கதாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
——————–
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் – 50 மீ ரைபிள் 3பொசிசன்ஸ் பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்

துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 50மீ ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவு தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சஞ்சீவ் ராஜ்புட் உள்பட 39 வீரர்கள் பங்கேற்றனர். இதில் சிறப்பாக செயல்படும் 8 வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் நீலிங் (Kneeling) முறை சுடுதலில் 397 புள்ளிகளும், ப்ரோன் (Prone) முறை சுடுதலில் 391 புள்ளிகளும், ஸ்டேண்டிங் (Standing) முறை சுடுதலில் 379 புள்ளிகளும் என மொத்தம் 1167-63x புள்ளிகள் பெற்று 21-வது இடத்தை பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தார்.

மற்றொரு இந்திய வீரர் சஞ்ஜீவ் ராஜ்புட்  நீலிங் (Kneeling) முறை சுடுதலில் 387 புள்ளிகளும், ப்ரோன் (Prone) முறை சுடுதலில் 393 புள்ளிகளும், ஸ்டேண்டிங் (Standing) முறை சுடுதலில் 377 புள்ளிகளும் என மொத்தம் 1157-55x புள்ளிகள் பெற்று 32-வது இடத்தை பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தார்.
——————-
ஒலிம்பிக் டிரிபிள் ஜம்ப் – வெனிசுலா வீராங்கனை தங்கம் வென்றார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான லாங்க் ஜம்ப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிச் சுற்றில் 12 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும்  6 வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் எது அவர்களுடைய சிறப்பான தாண்டுதலோ, அது போட்டி முடிவுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

அதன்படி வெனிசுலாவின் யுலிமார் ரோஜாஸ் 6-வது வாய்ப்பில் 15.67 (+0.7) மீட்டர் தூரத்திற்கு தாண்டினார். மற்ற வீராங்கனைகள் இந்த தூரத்தை விட குறைவாகவே தாண்டியதால் யுலிமார் ரோஜாஸ் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

இவர் தாண்டியது உலக சாதனையாகும். அத்துடன் வெனிசுலாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.
———————
ஒலிம்பிக் வட்டி எறிதல் – இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 3 பதக்கங்களை பெற்று உள்ளது. பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் பெற்றார். குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா அரை இறுதிக்கு நுழைந்ததன் மூலம் வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார். பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கல பதக்கம் பெற்று கொடுத்து பெருமை சேர்த்தார்.

இந்தியாவுக்கு 4-வது பதக்கத்தை தடகள வீராங்கனை கமல்பிரீத் கவூர் பெற்றுக்கொடுப்பாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டு எறியும் வீராங்கனையான அவர் தகுதி சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அவர் பங்கேற்கும் இறுதிப்போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

கமல்பிரீத் கவூர் தகுதிச் சுற்றில் 64 மீட்டர் தூரம் வட்டு எறிந்தார். இதேநிலையை அவர் இறுதிப்போட்டியில் செயல்படுத்தினால் பதக்க வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் அவர் 66.59 மீட்டர் தூரம் எறிந்ததே சிறந்த நிலையாகும். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. கமல்பிரீத் கவூர் தர வரிசையில் 32-வது இடத்தில் உள்ளார்.
—————
ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி – அரையிறுதியில் இந்தியா பெல்ஜியத்துடன் மோதுகிறது

மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஆக்கி அணி 49 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் அரைஇறுதிக்கு முன்னேறி சாதித்துள்ளது. நேற்று நடந்த கால்இறுதியில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

ஒலிம்பிக்கில் 8 முறை சாம்பியனான இந்திய ஆக்கி அணி கடைசியாக 1980-ல் தங்கப்பதக்கம் பெற்றது. அதன் பிறகு 1984 ஒலிம்பிக்கில் 5-வது இடத்தைப் பிடித்ததே சிறந்த நிலையாக இருந்தது. 2008-ல் தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் தான் இந்திய ஆக்கி அணி சிறப்பான நிலையை எட்டி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

இந்திய அணி அரை இறுதியில் பெல்ஜியத்தை நாளை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு இந்தப்போட்டி தொடங்குகிறது.

உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தை வீழ்த்தி 3-ம் நிலையில் உள்ள இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா ? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்தது. ஆனால் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 1-7 என்ற கோல் கணக்கில் மோசமாக தோற்றது.

இதனால் வழக்கமான நிலை ஏற்படும் என்று கருதப்பட்டது. அதன் பிறகு இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் எழுச்சி பெற்றது. தொடர்ச்சியாக ஸ்பெயின் (3-0), அர்ஜென்டினா (3-1), ஜப்பான் (5-3) அணிகளை வீழ்த்தியது.

நாளைய அரையிறுதியிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு பதக்கத்தை உறுதி செய்யுமா? என்பது ரசிகர்களின் உச்ச கட்ட எதிர்பார்ப்பாக இருக்கிறது.