Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் – வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

உலகக் கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையேயான போட்டி புனேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 51 மற்றும் 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹூசைன் மற்றும் மெஹிடி ஹாசன் முறையே 8 மற்றும் 3 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்தது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் நல்ல துவக்கம் கொடுத்தனர். இருவரும் முறையே 48 மற்றும் 53 ரன்களை குவித்தனர். அடுத்து களமிறங்கிய விராட் கோலி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். இவருடன் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். இவருடன் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கே.எல். ராகுல் பொறுப்பாக ஆடினார். இதன் காரணமாக இந்திய அணி 41.3 ஓவர்கள் முடிவில் 261 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்களை அடிக்க, கே.எல். ராகுல் 34 ரன்களுடன் களத்தில் இருந்தார்.