Tamilவிளையாட்டு

ஐபிஎல் 2024 – பெங்களூரை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி

ஐபிஎல் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டும் ரீஸ் டாப்லே 1 விக்கெட்டும் விழ்த்தினார்.

இதனையடுத்து கடினமான இலக்குடன் ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக டுபிளிசிஸ்- விராட் கோலி களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் குவித்தது. 20 பந்தில் 42 ரன்கள் குவித்து விராட் கோலி அவுட் ஆனார்.

அடுத்து வந்த வில் ஜேக் 7, பட்டிதார் 9, சவுரவ் சவுகான் 0, என வெளியேறினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டுபிளிசிஸ் 28 பந்துகள் சந்தித்து 62 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இதனை தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ருத்ர தாண்டவம் ஆடினார். வெற்றிக்காக போராடிய அவர் 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டையும் மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.