Tamilசெய்திகள்

கடம்பூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த மக்னா யானை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட எக்கத்தூர் வனப்பகுதி கச்சப்பள்ளம் என்ற இடத்தின் வனக்காப்பளர் அர்த்த நாரீஸ்வரன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதை அறிந்த வனத்துறை ஊழியர்கள் ஏதாவது வனவிலங்குகள் இறந்து கிடக்கிறதா என தேடி பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை இறந்து கிடப்பதை கண்டுபிடித்தனர்.

இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் பெயரில் கடம்பூர் வனச்சகர அலுவலர் (பொறுப்பு) மாரியப்பன், வன குழு மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில் யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் உடற் கூறு ஆய்வு மேற்கொண்டார்.

இதன் முடிவில் தான் யானை எவ்வாறு இறந்தது தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.