Tamilவிளையாட்டு

கிரிக்கெட்டில் எனது ரோல் மாடல் எப்போதும் சச்சின் டெண்டுல்கர் தான் – டோனி

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் உள்ள டோனிக்குச் சொந்தமான எம்.எஸ்.டோனி குளோபல் ஸ்கூல் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களுடன் டோனி கலந்துரையாடினார் தோனி.

அப்போது ஒருவர், உங்களுடைய கிரிக்கெட் ரோல் மாடல் யார்? எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:

கிரிக்கெட்டில் எனது ரோல் மாடல் எப்போதும் சச்சின் டெண்டுல்கர்தான். உங்களைப் போலவே நானும் சச்சின் விளையாடுவதைப் பார்த்து, எப்போதும் அவரைப் போல விளையாட வேண்டும் என நினைத்தேன். பின்னர்தான் நான் உணர்ந்தேன். என்னால் அவரைப் போல விளையாட முடியாது என்று. என் இதயத்தில் அந்த ஆசை எப்போதும் இருக்கும் என தெரிவித்தார்.