Tamilசினிமா

சந்தானம் நடிக்கும் பேய் படம் – பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒஎப்ஆர்ஒ இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘டிடி ரிட்டன்ஸ்’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.