Tamilசெய்திகள்

சவுக்கு சங்கர் வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியுப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமின்

யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக திருச்சி மாவட்ட காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளா். சவுக்கு சங்கர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆசிரியராக இருக்கும் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.

இதனால் பெலிக்ஸ் ஜெரால்டையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அவர் ஆறு மாதங்களுக்கு திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

கோவையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கிலும பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த வழக்கிலும் ஜாமின் கிடைக்கும் வரை சிறையில் இருந்து வெளியேற வரமுடியாது.