Tamilசெய்திகள்

பாராளுமன்ற தேர்தலுக்காக 25 ஆம் தேதி மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடக்கம்

பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 25-ம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் ஒன்றாம் தேதி 7-வது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இதற்கிடையே, வரும் 25-ம் தேதி தலைநகர் டெல்லியில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் அன்று டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என காலை 6 மணி வரை ரெயில்கள் இயங்கும். காலை 6 மணிக்குப் பிறகு வழக்கமான அட்டவணையின் கீழ் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.