Tamilசெய்திகள்

சென்னையில் தங்கம் விலை குறைவு – ஒரு சவரனுக்கு ரூ.120 குகுறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வரும் நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.5,785-க்கும் சவரன் ரூ.46,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.