Tamilசினிமா

சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் ‘கங்குவா’ படப்பிடிப்பு

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது, இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ‘கங்குவா’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ‘கங்குவா’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படப்பிடிப்பு ஒரு வாரம் நடைபெறும் என்றும் அதன்பின்னர் படப்பிடிப்புக்காக இந்த மாத இறுதியில் ராஜமுந்த்ரி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.