Tamilவிளையாட்டு

சையது மோடி பேட்மிண்டன் – முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி வரும் 23-ம்  தேதி வரை நடக்கிறது.

நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தன்யா ஹேமந்துடன் மோதினார்.

27 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21 – 9, 21 – 9 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.