Tamilசெய்திகள்

டெல்லி மாநகராட்சிகளை இணைக்கும் சட்டத்திருத்த மசோதாவை அமித் ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார்

 

கடந்த 2011-ம் ஆண்டில் டெல்லி மாநகராட்சி, தெற்கு டெல்லி, வடக்கு டெல்லி, கிழக்கு டெல்லி என 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டன. மூன்று மாநகராட்சிகளிலும் அடிப்படை பணிகளில் தொய்வு, ஊழியர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் கொடுக்க இயலாமை போன்ற நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டன.

இதையடுத்து, இந்தச் சிக்கல்களை தீர்க்க 3 மாநகராட்சிகளையும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளையும் இணைக்கும் சட்டத்திருத்த மசோதா-2022 க்கு மத்திய அமைச்சரவை கடந்த 21 ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதற்கு, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவையில் மாநகராட்சிகளை இணைக்கும் சட்டத்திருத்த மசோதா-2022 வை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தாக்கல் செய்கிறார்.