Tamilசெய்திகள்

தங்கத்தின் விலை உயர்வு – சவரனுக்கு ரூ.160 உயர்வு

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி விலை 76 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.76,000-க்கு விற்பனையாகிறது.