Tamilசினிமா

நல்ல படங்களை கொண்டாடமல் குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் – விஜய் ஆண்டனி காட்டம்

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘ரோமியோ’. இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ‘ரோமியோ’ கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விஜய் ஆண்டனி இன்று அவரது எக்ஸ் தள பக்கத்தில் காட்டமான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அதில், ‘ரோமியோ’ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே ‘ரோமியோ’ ஒரு நல்ல படம். போய் பாருங்க புரியும். ரோமியோவ ‘அன்பே சிவம்’ ஆக்கிடாதீங்க என கூறியுள்ளார்.