Tamilசினிமா

பள்ளி குழந்தைகளுடன் சைக்கிளிங் செய்த நடிகர் அஜித்குமார் – வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதுதான் அவரது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மகிழ் திருமேனி இயக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் தாமதம் ஆகி வந்ததால் இப்படத்தை படக்குழு கைவிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர், ‘விடாமுயற்சி’ கண்டிப்பாக உருவாகும் என உறுதியளித்தார்.

இந்நிலையில், நடிகர் அஜித், தனது மனைவி மற்றும் பள்ளிக் குழந்தைகளோடு ஜாலியாக சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையில் பள்ளிக் குழந்தைகளுடன் அஜித் சைக்கிளிங் செய்தபோது எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகின்றன. அஜித்தோடு அவரது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரும் சைக்கிளிங் செய்துள்ளனர்.