Tamilசெய்திகள்

புதுச்சேரி கடற்கரையில் தடையை மீறி குளித்தால் அபராதம்

புதுச்சேரியில் உள்ள கடற்கரையில் தடையை மீறி குளித்தால் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு சுற்றுலாத்துறை பரிந்துரை செய்துள்ளது. அண்மை காலமாக கடலில் மூழ்கி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு கடற்கரைகளில் மூழ்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த புத்தாண்டு அன்று 4 மாணவர்கள், அடுத்தடுத்து 2 பேர் என கடந்த 20 நாட்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரி கடற்கரையில் குளிக்க ஏற்கனவே தடை உள்ளது. ஆனால், தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகளே அதிகம் உயிரிழக்கின்றனர்.