Tamilவிளையாட்டு

புரோ கபடி லீக் – உபி யோதாவை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே ஆப்ஸ் சுற்று) முன்னேறின.

கடந்த 31ம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் மூன்றாவது சுற்றுக்கான போட்டியில் தபாங் டெல்லி மற்றும் உபி யோதா அணிகள் மோதின. இதில், உ.பி. யோதா அணி 45 – 33 என்ற புள்ளிக்கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. இதனால் உபி யோதா அணி 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில், உ.பி. யோதா அணி குஜராத் அணியை நேற்று எதிர்கொண்டது. முதலில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

ஆனாலும், முதல் பாதியில் குஜராத் அணி 19 -14 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து, குஜராத் அணி வீரர்கள் இரண்டாவது பாதியிலும் அதிரடியாக ஆடினர். அவர்களது ஆட்டத்துக்கு முன்னால் உ.பி. அணி வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இறுதியில், குஜராத் அணி 38 – 31 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதா அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை மறுதினம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

முதல் தகுதிச்சுற்றுபோட்டியில் குஜராத் அணி பெங்களூரு புல்ஸ் அணியிடம் தோற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *