Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2026 – ஈராக்கை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் பிலடெல்பியா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 2.30 மணிக்கு நடைபெற்ற ‘ஐ’ பிரிவு லீக் ஆட்டத்தில் பிரான்ஸ், ஈராக் அணிகள் மோதின.

போட்டியின் 14-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் எம்பாப்பே முதல் கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் 1-0 என பிரான்ஸ் முன்னிலை வகித்தது. 2வது பாதியில் 54-வது நிமிடத்தில் எம்பாப்பே மற்றொரு கோல் போட்டார். இதனால் பிரான்ஸ் அணி 2-0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் உஸ்மானே திம்பலி 3-வது கோலை போட்டார். இதனால் 3-0 என பிரான்ஸ் தொடர்ந்து முன்னிலை வகித்தது.

இறுதியில், பிரான்ஸ் அணி 3-0 என ஈராக் அணியை வென்றது. பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் விளையாடி அவற்றில் வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.