Tamilசெய்திகள்

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது – அமைச்சர் சிவசங்கர் தகவல்

தீபாவளி பண்டிகை வருகிற 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்று, மீண்டும் திரும்பி வரும் வகையில், சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர், அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* சென்னையில் இருந்து 14,268 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

* தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர 10,529 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

* தீபாவளிக்கு மொத்தமாக 20,378 பேருந்துகள் இயக்கப்படும்

* 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.