Tamilசெய்திகள்

24 மணி நேரத்தில் புதிதாக 2.593 பேருக்கு கொரோனா பாதிப்பு! – மத்திய சுகாதாரத்துறை தகவல்

நாட்டில் சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.

கடந்த 19-ந்தேதி பாதிப்பு 1,247 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 5 நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 57
ஆயிரத்து 545 ஆக உயர்ந்தது.

டெல்லியில் புதிய பாதிப்பு தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் பாதிப்பு 1,042 ஆக இருந்த நிலையில், நேற்று 1,094 பேருக்கு தொற்று உறுதியானது.

கேரளாவில் புதிதாக 300 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் புதிதாக 194 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் அதிகம்
ஆகும். அரியானாவில் 334, உத்தரபிரதேசத்தில் 225 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கர்நாடகாவிலும் தினசரி பாதிப்பு உயரத் தொடங்கி உள்ளது. அங்கு நேற்று 139 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக கேரளாவில் விடுபட்ட 38 மரணங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுதவிர டெல்லியில் 2 பேர், கர்நாடகா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிராவில் தலா ஒருவர் என மேலும் 44 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,22,193
ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 1,755 பேர் ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 19 ஆயிரத்து 479
ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 15,873 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றுமுன்தினத்தை விட 794 அதிகம் ஆகும்.

இதுவரை மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 187 கோடியே 67 லட்சத்தை கடந்துள்ளது. இதில் நேற்று 19,05,374 டோஸ்கள் அடங்கும்.

இதற்கிடையே நேற்று 4,36,532 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 83.47 கோடியாக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில்
தெரிவித்துள்ளது.