Tamilவிளையாட்டு

25 வருடங்களில் அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்ட கூகுள்! – முதலிடத்தில் யார் தெரியுமா?

இணைய தளத்தில் மிகப்பெரிய தேடும் மையமாக கூகுள் அமைந்துள்ளது. கூகுள் பக்கத்தில் தேடினால், கிடைக்காதது ஏதும் கிடையாது எனலாம். இணைய தளம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு சந்தேகம் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவதாக கூகுள்தான்.

இவ்வளவு புகழ் வாய்ந்த கூகுள் நிறுவனம், தங்களது தேடும் பக்கத்தில் கடந்த 25 வருடத்தில் அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட் வீரர், விளையாட்டு வீரர் யார் என்பதை தெரிவித்துள்ளத. இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் தெண்டுல்கர், எம்எஸ் தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களை பட்டியல் இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சர்வதேச சதங்கள் (50) அடித்த விராட் கோலிதான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார்.

விராட் கோலி இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார். கேப்டனாக இருந்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதும், ஐபிஎல் அணியின் கேப்டனாக இருந்தபோதும் முதன்மையான கோப்பைகளை வென்று கொடுத்ததில்லை. இருந்த போதிலும் கூகுளில் தேடும் நபர்களில் நம்பர் ஒன்னாக திகழ்கிறார். இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பத்திக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

ஆனால் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு முதல் இடம் கிடைக்கவில்லை. போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 38 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல்-நகர் கிளப்பில் விளையாடி வருகிறார். 38 வயது ஆனாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்.

ரொனால்டோ- மெஸ்சி இடையிலான போட்டி கால்பந்து விளையாட்டில் மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது. ரொனல்டோ ரியால் மாட்ரிக் அணிக்காகவும், மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும் விளையாடிய காலம் கால்பந்து விளையாட்டின் பொற்காலம் எனலாம்.

ரொனால்டோ மாஸ்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிக் அணிகளுக்காக விளையாடிய 15 வருட காலத்தில் ஜாம்பவானாக திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது.