Tamilசெய்திகள்

88 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுவிட்டன – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19-ம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என அறிவித்தது. மே மாதம் 23-ம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம். 2023 செப்டம்பர் 30-ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இதற்கிடையே, அறிவிப்பு வெளியான நாளில் இருந்து புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 75 சதவீதம் திரும்ப பெறப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 88 சதவீதம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஜூலை 31-ம் தேதி வரை ரூ.3.14 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. கடந்த 2018-19-ம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.