Tamilசெய்திகள்

வட மத்திய ரயில்வே (NCR) கொண்டுவந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னோடித் திட்டம்

ரயில் பயணங்களின் போது பயணிகளுக்கும் டிக்கெட் பரிசோதகர்களுக்கும் (TTE) இடையே ஏற்படும் தேவையற்ற தகராறுகளைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் வட மத்திய ரயில்வே (NCR) வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னோடித் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, பிரயாக்ராஜ் பிரிவில் இயங்கும் ‘பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ்’ (பிரயாக்ராஜ் – புதுடெல்லி) மற்றும் ‘ஸ்ரம் சக்தி எக்ஸ்பிரஸ்’ (கான்பூர் – புதுடெல்லி) ஆகிய ரயில்களில் பணிபுரியும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு உயர் ரக ‘பாடி கேமராக்கள்’ (Body-worn cameras) வழங்கப்பட்டு வருகின்றன. எச்டி வீடியோ, ஆடியோ பதிவு, இரவு நேர பார்வைத்திறன் (Night vision), நீண்ட பேட்டரி திறன் மற்றும் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை அழிக்க முடியாத ‘டேம்பர் புரூஃப்’ தொழில் நுட்ப வசதி கொண்ட இந்த கேமராக்கள் மூலம் பரிசோதனையின் போது நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் துல்லியமாகப் பதிவாகும். இதன்மூலம், தவறான புகார்கள் அளிக்கப்படுவதைத் தடுப்பதோடு, பயணிகள் மற்றும் ஊழியர்கள் மீதான அத்துமீறல்கள் குறித்த விசாரணைகளில் நடுநிலையான ஆதாரமாக இந்த வீடியோ பதிவுகள் பயன்படும்.

இந்த முன்னோடித் திட்டம் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்களிலும் இது கட்டம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.