சென்னையில் நடைபெற்ற மாணவர்களுடனான மாநாட்டில் வெளியிடப்பட்ட மோடி பற்றிய கிண்டல் வீடியோ வைரல்!
சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற மாணவர்களுடனான மாநாட்டில் வெளியிடப்பட்ட “மொகாம்போ மோடி இந்திய ஜனநாயகத்தை அழிக்கிறார்” (MOGAMBO MODI IS DESTROYING INDIA’s DEMOCRACY) என்ற நக்கல் கலந்த தலைப்பிலான காணொளி தற்போது இணையத்திலும் அரசியல் களத்திலும் பெரும் கிண்டலையும் பேசுபொருளையும் உருவாக்கியுள்ளது.
‘மொகாம்போ’ போல ஒட்டுமொத்த தேசத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைத்துக்கொண்டு, மத்திய அரசின் சதிகளால் மக்களின் அடிப்படை உரிமைகளையும் மாநிலங்களின் சுயாட்சியையும் சில்லறையாகச் சிதைக்கும் வித்தைகளை அரங்கேற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் லீலைகளை அந்தக் காணொளி அப்படியே அச்சுப் பிசகாமல் கிண்டலடித்துக் காட்டியுள்ளது.
கூட்டத்தில் திரண்டிருந்த மாணவர்களின் ஆரவாரத்திற்குக் நடுவே வெளியான இந்த நெட்டிசன் கலாய்ப்புக் காணொளி, சமூக வலைதளங்களில் வைரலாகிச் சங்கிகளைக் கதிகலங்க வைத்துள்ளதுடன், பாஜகவின் அடாவடி அரசியலைத் திறம்பட வெளிச்சம் போட்டுக் காட்டியும் வருகிறது.
